நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றத்தில் மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் நீதிமன்ற பதிவாளர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, குருணாகல் நீதவான் என்.டி.பி. குணரத்ன, காலி நீதவான் ஐ.என்.என். குமாரகே மற்றும் பலபிட்டிய நீதவான் ஆர்.டி.ஜனக ஆகியோர் உள்ளடங்குவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் ஒரே தடவையில் இடமாற்றம் நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இடமாற்றத்தில் மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் நீதிமன்ற பதிவாளர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, குருணாகல் நீதவான் என்.டி.பி. குணரத்ன, காலி நீதவான் ஐ.என்.என். குமாரகே மற்றும் பலபிட்டிய நீதவான் ஆர்.டி.ஜனக ஆகியோர் உள்ளடங்குவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.