• Sep 19 2024

காற்சட்டையில் மறைத்து கடத்தப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பாம்புகள் - சீனாவில் ஒருவர் கைது...!

Anaath / Jul 11th 2024, 11:24 am
image

Advertisement

சீனாவில் 100-க்கும் மேற்பட்ட உயிருடனிருந்த பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபரொருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து எல்லை நகரமான ஷென்சென் பகுதிக்கு செல்ல முயநிற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 வரைப் பிடித்து பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், பல வகையான நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.

மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறினர். 

மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறிய அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டக் காணொளியில் கடத்தி வரப்பட்ட வெவ்வேறு வகைப் பாம்புகள் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய மையமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், நாட்டின் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு சட்டங்கள் அனுமதியின்றி அந்த நாட்டின் பூர்வீகமற்ற உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டு வரத் தடை விதித்திருக்கிறது.

இதுபோன்று சட்டத்தை மீறி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். 








காற்சட்டையில் மறைத்து கடத்தப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பாம்புகள் - சீனாவில் ஒருவர் கைது. சீனாவில் 100-க்கும் மேற்பட்ட உயிருடனிருந்த பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபரொருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹாங்காங்கிலிருந்து எல்லை நகரமான ஷென்சென் பகுதிக்கு செல்ல முயநிற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  வரைப் பிடித்து பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், பல வகையான நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறினர். மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறிய அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனர்.இது தொடர்பாக வெளியிடப்பட்டக் காணொளியில் கடத்தி வரப்பட்ட வெவ்வேறு வகைப் பாம்புகள் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன.விலங்குகள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய மையமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், நாட்டின் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு சட்டங்கள் அனுமதியின்றி அந்த நாட்டின் பூர்வீகமற்ற உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டு வரத் தடை விதித்திருக்கிறது.இதுபோன்று சட்டத்தை மீறி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement