• May 20 2024

நேபாள நிலநடுக்கத்தில் 128 இற்கும் அதிகமானோர் பலி...!samugammedia

Anaath / Nov 4th 2023, 12:53 pm
image

Advertisement

நேபாளத்தில் ஜஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று வெள்ளிகிழமை இரவு 11.47 (18:02 GMT) மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது  6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் நிலநடுக்கத்தை 5.7 ஆக அளந்தது, அதை 6.2 இல் இருந்து குறைத்தது, அதே நேரத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு 5.6 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2015-ம் ஆண்டு இமயமலை நாட்டில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் சுமார் 9,000 பேர் பலியாகியதற்குப் பிறகு நடைபெற்ற நிலநடுக்கங்களில் இந்த நிலநடுக்கமே அதிகமாக உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிலா நடுக்கத்தினால் பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் மற்றும் பிற வரலாற்று தளங்கள் பின்னர் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டன, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீள்புனரமைக்க  $6 பில்லியன் பொருளாதாரத்திற்கு செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


நேபாள நிலநடுக்கத்தில் 128 இற்கும் அதிகமானோர் பலி.samugammedia நேபாளத்தில் ஜஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று வெள்ளிகிழமை இரவு 11.47 (18:02 GMT) மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது  6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் நிலநடுக்கத்தை 5.7 ஆக அளந்தது, அதை 6.2 இல் இருந்து குறைத்தது, அதே நேரத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு 5.6 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ம் ஆண்டு இமயமலை நாட்டில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் சுமார் 9,000 பேர் பலியாகியதற்குப் பிறகு நடைபெற்ற நிலநடுக்கங்களில் இந்த நிலநடுக்கமே அதிகமாக உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த நிலா நடுக்கத்தினால் பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் மற்றும் பிற வரலாற்று தளங்கள் பின்னர் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டன, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீள்புனரமைக்க  $6 பில்லியன் பொருளாதாரத்திற்கு செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement