எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இதற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 18 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.
அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த, பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் கண்காணிப்பில் 20ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இதற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 18 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த, பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.