• Sep 10 2024

சஜித்துடன் இணையும் 20க்கும் மேற்பட்ட தீவிர அரசியல் கட்சிகள்! விரைவில் சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்

Chithra / Aug 13th 2024, 12:02 pm
image

Advertisement


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று சுமார் 20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஐக்கிய மக்கள் கூட்டணி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார  குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகளும் குழுக்களும் தமது கூட்டணியில் இணையவுள்ளதாக   ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி இந்த நாட்டில் இதுவரை உருவாகாத பலமான கூட்டணி உருவாக்கப்பட்டது. இன்னும் 20க்கும் மேற்பட்ட தீவிர அரசியல் கட்சிகள் எம்முடன் கூட்டணி அமைக்கின்றன. இது தொடரும். 

இதன் ஊடாக இந்த நாட்டின் வரலாற்றில் வலிமையான அரசாங்கத்தையும் வலிமையான ஜனாதிபதியையும் ஸ்தாபிக்க இது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.என்றார்.


இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விரைவில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர். 

இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், சஜித் பிரேமதாசவை சந்தித்துப் பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.


சஜித்துடன் இணையும் 20க்கும் மேற்பட்ட தீவிர அரசியல் கட்சிகள் விரைவில் சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று சுமார் 20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஐக்கிய மக்கள் கூட்டணி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார  குறிப்பிட்டார்.இதன்படி எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகளும் குழுக்களும் தமது கூட்டணியில் இணையவுள்ளதாக   ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 8ஆம் திகதி இந்த நாட்டில் இதுவரை உருவாகாத பலமான கூட்டணி உருவாக்கப்பட்டது. இன்னும் 20க்கும் மேற்பட்ட தீவிர அரசியல் கட்சிகள் எம்முடன் கூட்டணி அமைக்கின்றன. இது தொடரும். இதன் ஊடாக இந்த நாட்டின் வரலாற்றில் வலிமையான அரசாங்கத்தையும் வலிமையான ஜனாதிபதியையும் ஸ்தாபிக்க இது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.என்றார்.இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விரைவில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், சஜித் பிரேமதாசவை சந்தித்துப் பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement