• Dec 03 2024

லெபனானிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட சீனர்கள் வெளியேற்றம்!

Tamil nila / Oct 5th 2024, 6:20 pm
image

லெபனானிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட சீனக் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது.

இவர்கள்  இரு கட்டங்களாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் தாய்வான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் லெபனானில் உள்ள சீனத் தூதரகம் அங்குள்ள சீனக் குடிமக்களுக்கு தொடர்ந்தும் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

97 தென்கொரிய குடிமக்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் லெபனானிலிருந்து இராணுவப் போக்குவரத்து விமானத்தில் சனிக்கிழமை தென்கொரியா திரும்பியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இராணுவ விமானம் ஒன்றில் லெபனானிலிருந்து புறப்பட்ட ஜெர்மானியக் குடிமக்கள் 130 பேர், புதன்கிழமை இரவு ஃபிராங்ஃபர்ட் நகரில் தரையிறங்கினர்.

லெபனானிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட சீனர்கள் வெளியேற்றம் லெபனானிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட சீனக் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது.இவர்கள்  இரு கட்டங்களாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் தாய்வான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் லெபனானில் உள்ள சீனத் தூதரகம் அங்குள்ள சீனக் குடிமக்களுக்கு தொடர்ந்தும் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.97 தென்கொரிய குடிமக்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் லெபனானிலிருந்து இராணுவப் போக்குவரத்து விமானத்தில் சனிக்கிழமை தென்கொரியா திரும்பியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.இராணுவ விமானம் ஒன்றில் லெபனானிலிருந்து புறப்பட்ட ஜெர்மானியக் குடிமக்கள் 130 பேர், புதன்கிழமை இரவு ஃபிராங்ஃபர்ட் நகரில் தரையிறங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement