• Nov 21 2024

நாட்டில் இன்று 200 மி.மீ.க்கும் அதிக கடும் மழை! 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Chithra / Oct 11th 2024, 8:18 am
image

 

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும். 

இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் ஹன்வெல்ல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அது 196.5 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.

கம்பஹா திவுலபிட்டிய பிரதேசத்தில் 173.5 மில்லிமீற்றர் மழையும் களுத்துறை வொகன் தோட்டப் பகுதியில் 163.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 

பதுளை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 01ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை  நடவடிக்கை எடுத்துள்ளது.


 

நாட்டில் இன்று 200 மி.மீ.க்கும் அதிக கடும் மழை 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை  நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் ஹன்வெல்ல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அது 196.5 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.கம்பஹா திவுலபிட்டிய பிரதேசத்தில் 173.5 மில்லிமீற்றர் மழையும் களுத்துறை வொகன் தோட்டப் பகுதியில் 163.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.காலி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பதுளை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 01ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை  நடவடிக்கை எடுத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement