• Apr 24 2025

இந்த ஆண்டு இதுவரை 2,500 குற்றச் செயல்கள் பதிவு

Chithra / Apr 24th 2025, 9:38 am
image

 

இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 2,500 சைபர் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

அவற்றில்  164 சம்பவங்கள் இணைய மோசடிகளுடன் தொடர்புடையதாக  கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அதிகாரி சாருக்க தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.

162 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகவும், 

291 போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறுவர்கள் தொடர்பான ஏழு ஒன்லைன் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியுள்ளன, 

அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என தமுனுபொல எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 2,500 குற்றச் செயல்கள் பதிவு  இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 2,500 சைபர் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.அவற்றில்  164 சம்பவங்கள் இணைய மோசடிகளுடன் தொடர்புடையதாக  கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அதிகாரி சாருக்க தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.162 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகவும், 291 போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.சிறுவர்கள் தொடர்பான ஏழு ஒன்லைன் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியுள்ளன, அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என தமுனுபொல எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement