சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர்.
இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது என தெரியவருகின்றது.
சீனாவில் கடும் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 47க்கும் மேற்பட்டோர் - மீட்புப்பணி தீவிரம் சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர்.இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது என தெரியவருகின்றது.