• Nov 28 2024

அரசு விடுத்த எச்சரிக்கை - சுமார் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைப்பு..!

gun
Chithra / Oct 21st 2024, 10:33 am
image

 

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை தற்காலிகமாக கையளிப்பதற்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சினால் உயிர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளின் மீளாய்வுக்கு உட்பட்டு தற்காலிக அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிமருந்து களஞ்சியசாலையில் உரிய துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவித்திருந்தது.

இல்லையெனில், 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட உரிமதாரர்களுக்கு எச்சரித்திருந்தது.

இந் நிலையில், ஏறக்குறைய 50 துப்பாக்கிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறெனினும், பாதுகாப்பு அமைச்சு பல்வேறு காரணங்களுக்காக சுமார் 1650 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


அரசு விடுத்த எச்சரிக்கை - சுமார் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைப்பு.  பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை தற்காலிகமாக கையளிப்பதற்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு அமைச்சினால் உயிர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளின் மீளாய்வுக்கு உட்பட்டு தற்காலிக அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இதன்படி, நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிமருந்து களஞ்சியசாலையில் உரிய துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவித்திருந்தது.இல்லையெனில், 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட உரிமதாரர்களுக்கு எச்சரித்திருந்தது.இந் நிலையில், ஏறக்குறைய 50 துப்பாக்கிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எவ்வாறெனினும், பாதுகாப்பு அமைச்சு பல்வேறு காரணங்களுக்காக சுமார் 1650 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement