• May 09 2024

குழந்தையை தூங்க வைக்க 119க்கு அழைப்பெடுத்த அம்மா - இலங்கையில் விசித்திரச் சம்பவம்

harsha / Dec 19th 2022, 11:35 am
image

Advertisement

மூன்றாம் தரத்தில் படிக்கும் தனது குழந்தை, தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 தம்புள்ளை பிரதேசத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர், பதினைந்து கிலோமீற்றருக்கும் அப்பால் இருக்கும் குறித்த வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.

பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹோர்ன் அடித்ததையடுத்து, சில நிமிடங்களுக்குபின்னர் ​​ஒரு பெண் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். குறித்த பெண்ணிடம் புகார் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இப்போது ரொம்ப லேட் ஆகுது, குழந்தை உறங்குகிறது என அப்பெண் பதில் அளித்துள்ளார் ,

இந்த விசித்திரமான முறைப்பாடு குறித்து தாயாரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்தனர்.

தனது குழந்தை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், மற்ற குழந்தைகளை தூங்க விடாமல் குழப்படி செய்வதாகவும், குழந்தையை பயமுறுத்துவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் பதிலளித்துள்ளார்.

குழந்தைக்கு இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டபோது, மாலை சுமார் 6:30 மணிக்கு குழந்தைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.

இவ்வாறான சிறு சிறு சம்பவங்கலால் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

குழந்தையை தூங்க வைக்க 119க்கு அழைப்பெடுத்த அம்மா - இலங்கையில் விசித்திரச் சம்பவம் மூன்றாம் தரத்தில் படிக்கும் தனது குழந்தை, தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தம்புள்ளை பிரதேசத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர், பதினைந்து கிலோமீற்றருக்கும் அப்பால் இருக்கும் குறித்த வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹோர்ன் அடித்ததையடுத்து, சில நிமிடங்களுக்குபின்னர் ​​ஒரு பெண் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். குறித்த பெண்ணிடம் புகார் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.“இப்போது ரொம்ப லேட் ஆகுது, குழந்தை உறங்குகிறது என அப்பெண் பதில் அளித்துள்ளார் ,இந்த விசித்திரமான முறைப்பாடு குறித்து தாயாரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்தனர்.தனது குழந்தை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், மற்ற குழந்தைகளை தூங்க விடாமல் குழப்படி செய்வதாகவும், குழந்தையை பயமுறுத்துவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் பதிலளித்துள்ளார்.குழந்தைக்கு இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டபோது, மாலை சுமார் 6:30 மணிக்கு குழந்தைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.இவ்வாறான சிறு சிறு சம்பவங்கலால் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement