• May 02 2024

ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்ட தாய், தந்தை மற்றும் பிள்ளைகள்! இலங்கையில் விநோதச் சம்பவம்

Chithra / Dec 16th 2022, 9:37 am
image

Advertisement

கண்டியில் திருமணமாகாமல் 35 வருடங்களை ஒன்றாக வாழ்ந்த தந்தையும் தாயும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட மகள் உட்பட பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் மேலும் 19 குடும்பங்கள் ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

யட்டிநுவர பிரதேச செயலகத்தின் குருகம என்ற கிராமத்தில் திருமணம் ஆகாமல் குழந்தைகளை வளர்த்து ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குருகம ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு ஒரே நேரத்தில் நேற்று காலை இந்து முறைப்படி திருமணம் பதிவு செய்யப்பட்டது.


54 வயதான ஆறுமுகம் மற்றும் 52 வயதான சரஸ்வதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர், அவர்களின் திருமண நாளில், அவர்களின் மூத்த மகள் 34 வயது மரியாவும் 38  வயதான கமலாதாஸ் என்பவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.


கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் யட்டிநுவர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருமண பதிவு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒன்றாக வளர்த்தாலும், சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல், தேயிலைத் தோட்டம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். 

ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்ட தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் இலங்கையில் விநோதச் சம்பவம் கண்டியில் திருமணமாகாமல் 35 வருடங்களை ஒன்றாக வாழ்ந்த தந்தையும் தாயும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட மகள் உட்பட பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் மேலும் 19 குடும்பங்கள் ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.யட்டிநுவர பிரதேச செயலகத்தின் குருகம என்ற கிராமத்தில் திருமணம் ஆகாமல் குழந்தைகளை வளர்த்து ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குருகம ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு ஒரே நேரத்தில் நேற்று காலை இந்து முறைப்படி திருமணம் பதிவு செய்யப்பட்டது.54 வயதான ஆறுமுகம் மற்றும் 52 வயதான சரஸ்வதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர், அவர்களின் திருமண நாளில், அவர்களின் மூத்த மகள் 34 வயது மரியாவும் 38  வயதான கமலாதாஸ் என்பவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் யட்டிநுவர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருமண பதிவு நிகழ்வு இடம்பெற்றது.இந்த 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒன்றாக வளர்த்தாலும், சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல், தேயிலைத் தோட்டம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement