போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு தாய் விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பதிவாகியுள்ளது.
பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42 வயதான பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் போதை மருந்து வாங்க பணம் இல்லாததால் தனது 3 வயது மகளை விற்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதை மருந்து வாங்க தனது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார். இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி சடலத்தை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சியை பொலிசார் ஆய்வு செய்த போது சிறுமியை தோளில் சுமந்தபடி இளைஞர் வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை மருந்துக்காக சிறுமியை அவரது தாயே விற்றமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் சிறுமியின் வீட்டருகில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்த போது வீட்டில் இருந்து இளைஞர் வலுக்கட்டாயமாக சிறுமியை கொண்டு செல்லப்படுவதும், அந்த சிறுமி இளைஞரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் பதிவாகியுள்ளது.
மேலும் அந்த இளைஞர் சிறுமியை முகத்தில் தாக்குவதும், பின்னர் தோளில் போட்டுக்கொண்டு காட்டுப்பாதைக்கு செல்வதும் பதிவாகி இருந்தது.
மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பம் தொடர்பில் சிறுமியின் தாய், மற்றும் 17 வயதான இளைஞர் ஒருவர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை விற்ற தாய் samugammedia போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு தாய் விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பதிவாகியுள்ளது.பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42 வயதான பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் போதை மருந்து வாங்க பணம் இல்லாததால் தனது 3 வயது மகளை விற்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.போதை மருந்து வாங்க தனது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார். இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுமி சடலத்தை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சியை பொலிசார் ஆய்வு செய்த போது சிறுமியை தோளில் சுமந்தபடி இளைஞர் வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை மருந்துக்காக சிறுமியை அவரது தாயே விற்றமை தெரியவந்துள்ளது.இதையடுத்து பொலிசார் சிறுமியின் வீட்டருகில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்த போது வீட்டில் இருந்து இளைஞர் வலுக்கட்டாயமாக சிறுமியை கொண்டு செல்லப்படுவதும், அந்த சிறுமி இளைஞரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் பதிவாகியுள்ளது.மேலும் அந்த இளைஞர் சிறுமியை முகத்தில் தாக்குவதும், பின்னர் தோளில் போட்டுக்கொண்டு காட்டுப்பாதைக்கு செல்வதும் பதிவாகி இருந்தது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.இந்த சம்பம் தொடர்பில் சிறுமியின் தாய், மற்றும் 17 வயதான இளைஞர் ஒருவர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.