வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்
பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார்சைக்கிள்களில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் இரு பெண் உட்பட மூவர்காயம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.விபத்தில் மோட்டார்சைக்கிள்களில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.