• Jun 30 2024

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்படும் மோட்டார் சைக்கிள்கள்...! தொடரும் மர்மம் - பின்னணி என்ன?

Sharmi / Jun 27th 2024, 2:42 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர்  யாழ் கோப்பாய் இராச பாதையிலும்  மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழில் எரிந்த நிலையில் மீட்கப்படும் மோட்டார் சைக்கிள்கள். தொடரும் மர்மம் - பின்னணி என்ன யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர்  யாழ் கோப்பாய் இராச பாதையிலும்  மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement