• Mar 11 2025

கத்தரிக்காய் கதையை சொல்லி துன்புறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்; ரோகிணி எம்.பி. பகிரங்கம்

Chithra / Mar 8th 2025, 11:56 am
image


முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராய்ச்சி  என்னை  ஒரு கத்தரிக்காய் கதையை சொல்லி  துன்புறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மகளிர் தினமாகிய இன்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாய்மொழி மூலமாக சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கிறேன். முதன் முதலில் திஸ்ஸ குட்டியாராய்ச்சி உறுப்பினர் என்னை  ஒரு கத்தரிக்காய் கதையை சொல்லி  துன்புறுத்தினார்.

இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட செயற்கைப் பசளைகளின் களவாடல்கள் பற்றி குறிப்பிட்ட போது அது இடம்பெற்றது. அடுத்ததாக சுசில் பிரேம் ஜெயந்த. ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளார்கள் என்று கூறியபோது அது இடம்பெற்றது.

ராஜாங்க அமைச்சரின் வாய்மூல பேச்சின் பொழுது ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்டபோது வாய் மூலமாக துன்புறுத்தப்பட்டேன். நளின் ஹேவாகே மூலம் தூற்றுதல் இடம்பெற்றது.  தம்புத்தேகம புகையிரத நிலையத்தைப் பற்றிக்  கதைத்ததனால் அது இடம்பெற்றது.

இந்தப் பாராளுமன்றத்திலேயே இப்படியான நிலை என்றால் வெளியில் எப்படி இருக்கும்?   பாராளுமன்றத்தின் பெண்கள் ஒன்றியம் நடைமுறையில் இருக்கிறது. அப்படி ஒரு நிலையில் இன்றைய தினம் ஊதா நிறத்தை அணிந்திருக்கிறோம். தவிசாளர் ஒரு தீர்மானம் எடுத்திருந்தார். இதில் அரசியல் இல்லை.

நாங்கள் அனைவரும் ஒரே எண்ணத்துடன் இருக்கிறோம். பெண்களுக்கு எங்கே அநீதி இடம் பெறுகிறதோ அங்கே நாங்கள் முன்னிலையாகுவோம். ஊதாவின் அர்த்தம் நியாயம். அதனால் இன்று ஊதா நிறத்தை அணிந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

கத்தரிக்காய் கதையை சொல்லி துன்புறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்; ரோகிணி எம்.பி. பகிரங்கம் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராய்ச்சி  என்னை  ஒரு கத்தரிக்காய் கதையை சொல்லி  துன்புறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி பகிரங்கப்படுத்தியுள்ளார்.மகளிர் தினமாகிய இன்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாய்மொழி மூலமாக சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கிறேன். முதன் முதலில் திஸ்ஸ குட்டியாராய்ச்சி உறுப்பினர் என்னை  ஒரு கத்தரிக்காய் கதையை சொல்லி  துன்புறுத்தினார்.இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட செயற்கைப் பசளைகளின் களவாடல்கள் பற்றி குறிப்பிட்ட போது அது இடம்பெற்றது. அடுத்ததாக சுசில் பிரேம் ஜெயந்த. ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளார்கள் என்று கூறியபோது அது இடம்பெற்றது.ராஜாங்க அமைச்சரின் வாய்மூல பேச்சின் பொழுது ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்டபோது வாய் மூலமாக துன்புறுத்தப்பட்டேன். நளின் ஹேவாகே மூலம் தூற்றுதல் இடம்பெற்றது.  தம்புத்தேகம புகையிரத நிலையத்தைப் பற்றிக்  கதைத்ததனால் அது இடம்பெற்றது.இந்தப் பாராளுமன்றத்திலேயே இப்படியான நிலை என்றால் வெளியில் எப்படி இருக்கும்   பாராளுமன்றத்தின் பெண்கள் ஒன்றியம் நடைமுறையில் இருக்கிறது. அப்படி ஒரு நிலையில் இன்றைய தினம் ஊதா நிறத்தை அணிந்திருக்கிறோம். தவிசாளர் ஒரு தீர்மானம் எடுத்திருந்தார். இதில் அரசியல் இல்லை.நாங்கள் அனைவரும் ஒரே எண்ணத்துடன் இருக்கிறோம். பெண்களுக்கு எங்கே அநீதி இடம் பெறுகிறதோ அங்கே நாங்கள் முன்னிலையாகுவோம். ஊதாவின் அர்த்தம் நியாயம். அதனால் இன்று ஊதா நிறத்தை அணிந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement