• May 20 2024

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு..!samugammedia

Sharmi / May 18th 2023, 1:19 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18)  தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் ,முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள்  இடம் பெற்று வரும் நிலையில்,  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது

அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில்  தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில்   மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும்   மெசிடோ நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.




வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.samugammedia முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18)  தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் ,முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள்  இடம் பெற்று வரும் நிலையில்,  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில்  தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில்   மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும்   மெசிடோ நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement