• Dec 26 2024

கொலை சம்பவம்; தேடப்பட்டு வந்த தந்தையும் மகனும் கைது!

Chithra / Dec 25th 2024, 3:47 pm
image



கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மாதம் 22ஆம் திகதி, மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடபிட்டிய பகுதியில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில், 42 வயதுடைய நபரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட நபர் மணக்குளம், காக்கப்பள்ளியில் வசித்து வந்தவர்  என்பதுடன், அவரது கொலை தொடர்பில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விசாரணையின் போது, ​​குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (24) மாலை மாதம்பே, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 53 வயதுடைய தந்தை மற்றும் மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை சம்பவம்; தேடப்பட்டு வந்த தந்தையும் மகனும் கைது கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இம்மாதம் 22ஆம் திகதி, மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடபிட்டிய பகுதியில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில், 42 வயதுடைய நபரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவர் கைது செய்யப்பட்டனர்.கொலை செய்யப்பட்ட நபர் மணக்குளம், காக்கப்பள்ளியில் வசித்து வந்தவர்  என்பதுடன், அவரது கொலை தொடர்பில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அந்த விசாரணையின் போது, ​​குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (24) மாலை மாதம்பே, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 53 வயதுடைய தந்தை மற்றும் மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement