• Sep 20 2024

விவ‌சாயிக‌ளுக்கு உத‌வித்தொகை வழங்கப்படாமைக்கு காரணம் முஸ்லிம் சோம்பேறி எம்.பி.மார் - காங்கிர‌ஸ் க‌ட்சி குற்றச்சாட்டு!

Tamil nila / Dec 28th 2022, 5:38 pm
image

Advertisement

அர‌சாங்க‌ம் விவ‌சாயிக‌ளுக்கு  வ‌ழ‌ங்கி வ‌ரும் உத‌வித்தொகை  அம்பாறை  மாவ‌ட்ட‌த்தில் இதுவரை வழங்கப்படாமைக்கு காரணம் முஸ்லிம் சோம்பேறி எம்.பி.மார் ப‌ல‌ர் உள்ள‌து தான் என்று

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி  குற்றஞ்சாட்டியுள்ளது.


இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மேலும் தெரிவித்த‌தாவ‌து,


இதுவ‌ரை இல்லாத‌ அள‌வு அர‌சாங்க‌ம் விவ‌சாயிக‌ளுக்கு உத‌வித்தொகை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இது ஜ‌னாதிப‌தி ரணில் விக்ர‌ம‌சிங்க‌வின் ம‌ற்றுமொரு வெற்றியாகும். 

 

விவ‌சாயிக‌ளுக்கான‌ உர‌ விநியோக‌த்தை முன்னாள் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ த‌டை செய்த‌த‌ன் மூல‌ம் பாரிய‌ த‌வ‌றை செய்திருந்தார். இது பிழையான‌ முடிவு என்று அப்போதே நாம் ப‌கிர‌ங்க‌மாக‌ சுட்டிக்காட்டினோம்.


இப்போது நாடு முழுவ‌தும் யூரியா உர‌ம் தாராள‌மாக‌ கிடைக்கிற‌து. அத்துட‌ன் நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் வ‌ழ‌ங்க‌வுள்ள‌ உத‌வித்தொகை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவான விவசாயக் குடும்பங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட வுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, இந்தத் தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்  எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.


அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியானது, நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.


நாட்டின் விவசாயிகளுக்கு வேறு எந்த பயிர்ச்செய்கை காலத்திலும் இவ்வளவு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் தெரிய‌ வ‌ருகிற‌து.


ஆனாலும், இந்த‌ உத‌விக‌ள் அம்பாரை மாவ‌ட்ட‌ விவ‌சாயிக‌ளுக்கு இன்ன‌மும் கிடைக்க‌வில்லை. 

மிக‌ அதிக‌ விவ‌சாய‌ பூமியை கொண்ட‌ அம்பாரை மாவ‌ட்ட‌ விவ‌சாயிக‌ளுக்கும் மேற்ப‌டி உத‌விக‌ள் கிடைக்க‌ அர‌சு ஆவ‌ண‌ செய்ய‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார்.

விவ‌சாயிக‌ளுக்கு உத‌வித்தொகை வழங்கப்படாமைக்கு காரணம் முஸ்லிம் சோம்பேறி எம்.பி.மார் - காங்கிர‌ஸ் க‌ட்சி குற்றச்சாட்டு அர‌சாங்க‌ம் விவ‌சாயிக‌ளுக்கு  வ‌ழ‌ங்கி வ‌ரும் உத‌வித்தொகை  அம்பாறை  மாவ‌ட்ட‌த்தில் இதுவரை வழங்கப்படாமைக்கு காரணம் முஸ்லிம் சோம்பேறி எம்.பி.மார் ப‌ல‌ர் உள்ள‌து தான் என்றுஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி  குற்றஞ்சாட்டியுள்ளது.இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மேலும் தெரிவித்த‌தாவ‌து,இதுவ‌ரை இல்லாத‌ அள‌வு அர‌சாங்க‌ம் விவ‌சாயிக‌ளுக்கு உத‌வித்தொகை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இது ஜ‌னாதிப‌தி ரணில் விக்ர‌ம‌சிங்க‌வின் ம‌ற்றுமொரு வெற்றியாகும்.  விவ‌சாயிக‌ளுக்கான‌ உர‌ விநியோக‌த்தை முன்னாள் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ த‌டை செய்த‌த‌ன் மூல‌ம் பாரிய‌ த‌வ‌றை செய்திருந்தார். இது பிழையான‌ முடிவு என்று அப்போதே நாம் ப‌கிர‌ங்க‌மாக‌ சுட்டிக்காட்டினோம்.இப்போது நாடு முழுவ‌தும் யூரியா உர‌ம் தாராள‌மாக‌ கிடைக்கிற‌து. அத்துட‌ன் நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் வ‌ழ‌ங்க‌வுள்ள‌ உத‌வித்தொகை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவான விவசாயக் குடும்பங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட வுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அதற்கமைய, இந்தத் தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்  எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியானது, நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.நாட்டின் விவசாயிகளுக்கு வேறு எந்த பயிர்ச்செய்கை காலத்திலும் இவ்வளவு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் தெரிய‌ வ‌ருகிற‌து.ஆனாலும், இந்த‌ உத‌விக‌ள் அம்பாரை மாவ‌ட்ட‌ விவ‌சாயிக‌ளுக்கு இன்ன‌மும் கிடைக்க‌வில்லை. மிக‌ அதிக‌ விவ‌சாய‌ பூமியை கொண்ட‌ அம்பாரை மாவ‌ட்ட‌ விவ‌சாயிக‌ளுக்கும் மேற்ப‌டி உத‌விக‌ள் கிடைக்க‌ அர‌சு ஆவ‌ண‌ செய்ய‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement