திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று (17) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகே உட்பட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் ,முத்து நகர் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீட்டு தருமாறு போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு, நெல் வயல்கள் இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, பொய்கள் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கருத்துரைத்த விவசாயிகள் தற்போது மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில் விவசாய செய்கைக்கான தயார் நிலைபடுத்த வேண்டியுள்ளது. மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நிலங்களை தருவதாகம் சோளர் திட்டம் இல்லாத நிலங்களில் விவசாய செய்கை ஆரம்பிக்க முடியும் என கூறிவிட்டு தொடர்ந்தும் கம்பனிகளுக்கு விளை நிலத்தை வழங்குகின்றனர் என்றனர்.
முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று (17) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகே உட்பட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் ,முத்து நகர் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீட்டு தருமாறு போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு, நெல் வயல்கள் இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, பொய்கள் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது கருத்துரைத்த விவசாயிகள் தற்போது மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில் விவசாய செய்கைக்கான தயார் நிலைபடுத்த வேண்டியுள்ளது. மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நிலங்களை தருவதாகம் சோளர் திட்டம் இல்லாத நிலங்களில் விவசாய செய்கை ஆரம்பிக்க முடியும் என கூறிவிட்டு தொடர்ந்தும் கம்பனிகளுக்கு விளை நிலத்தை வழங்குகின்றனர் என்றனர்.