இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட், இது பாரதூரமான விடயம் இது குறித்து சட்டசபையில் விவாதம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள விவசாய அமைச்சர் இந்த விவகாரம் வருமான திணைக்களத்தின் கீழ் வருவதாகவும் எனினும் இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் எழுந்த சர்ச்சை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட், இது பாரதூரமான விடயம் இது குறித்து சட்டசபையில் விவாதம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள விவசாய அமைச்சர் இந்த விவகாரம் வருமான திணைக்களத்தின் கீழ் வருவதாகவும் எனினும் இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.