• Mar 17 2025

மூதூரை மிரட்டிய இரட்டை கொலை - உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம்

Chithra / Mar 16th 2025, 2:27 pm
image


மூதூர் - தாஹாநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் மூதூர் கிறிஸ்தவ சேமக்காலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தில் அதிகளவானவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கொலை சம்பவத்தில் மூதூர் -தாஹாநகர் பகுதியைச் சேர்ந்த இராசகுமாரி சக்திவேல் (74), இராஜேஸ்வரி சக்திவேல் (68) ஆகிய இரு சகோதரிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலை சம்பவத்தை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 15 வயதுடைய பேத்தி சம்பவ தினமே மூதூர் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டு பின்னர் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று (15) கொழும்பிலுள்ள சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மூதூரை மிரட்டிய இரட்டை கொலை - உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம் மூதூர் - தாஹாநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் மூதூர் கிறிஸ்தவ சேமக்காலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.நல்லடக்கத்தில் அதிகளவானவர்கள் கலந்து கொண்டனர்.குறித்த கொலை சம்பவத்தில் மூதூர் -தாஹாநகர் பகுதியைச் சேர்ந்த இராசகுமாரி சக்திவேல் (74), இராஜேஸ்வரி சக்திவேல் (68) ஆகிய இரு சகோதரிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த கொலை சம்பவத்தை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 15 வயதுடைய பேத்தி சம்பவ தினமே மூதூர் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டு பின்னர் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று (15) கொழும்பிலுள்ள சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement