சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்திய எனது இலக்கை நோக்கிய அரசியல் பயணம் தொடரும் என கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்கள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"2015 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது.
இரு தடவைகள் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு தலைமைத்துவம் வழங்கினேன்.
சமூக நீதி மற்றும் சமூக உரிமைகளை மையப்படுத்தியதாகவே எனது நடவடிக்கைகள் அமைந்தன.
பாராளுமன்றத்திலும் உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசி உள்ளேன்.
அதேவழியில் எனது பயணம் தொடரும். அந்த பயணத்தை மேற்கொள்வதற்கு, இலக்கை அடைவதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் துணிந்து செயற்படுவேன்.
கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதில் சில அரசியல் முகவர்களே முன்னின்று செயற்பட்டனர். தோட்டங்களுக்கு சென்று, வாக்குகளைக்கூட விலைபேசினர். பணபலத்தைக் காட்டினார்கள். வதந்திகளை பரப்பினார்கள்.
இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பலர் வாக்களிப்பதற்குகூட செல்லவில்லை. அந்த அரசியல் முகவர்கள் யாரென்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் தற்போது காணாமல்போய்விட்டனர்.
என்மீது நம்பிக்கை இருந்ததால்தான் இரு தடவைகள் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். அதே நம்பிக்கை இன்றளவிலும் உள்ளது. உண்மை ஒரு நாள் வெல்லும் என்பார்கள்.
எனவே, உண்மை என்னவென்பது மக்களுக்கு தற்போது புரிக்கின்றது.
ஆகவே மக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் எனவும் தெரிவித்தார்.
சமூக நீதியை மையப்படுத்திய எனது அரசியல் பயணம் தொடரும்- வேலுகுமார் உறுதி. சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்திய எனது இலக்கை நோக்கிய அரசியல் பயணம் தொடரும் என கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.தனது ஆதரவாளர்கள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்."2015 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது. இரு தடவைகள் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு தலைமைத்துவம் வழங்கினேன். சமூக நீதி மற்றும் சமூக உரிமைகளை மையப்படுத்தியதாகவே எனது நடவடிக்கைகள் அமைந்தன. பாராளுமன்றத்திலும் உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசி உள்ளேன்.அதேவழியில் எனது பயணம் தொடரும். அந்த பயணத்தை மேற்கொள்வதற்கு, இலக்கை அடைவதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் துணிந்து செயற்படுவேன்.கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதில் சில அரசியல் முகவர்களே முன்னின்று செயற்பட்டனர். தோட்டங்களுக்கு சென்று, வாக்குகளைக்கூட விலைபேசினர். பணபலத்தைக் காட்டினார்கள். வதந்திகளை பரப்பினார்கள்.இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பலர் வாக்களிப்பதற்குகூட செல்லவில்லை. அந்த அரசியல் முகவர்கள் யாரென்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் தற்போது காணாமல்போய்விட்டனர்.என்மீது நம்பிக்கை இருந்ததால்தான் இரு தடவைகள் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். அதே நம்பிக்கை இன்றளவிலும் உள்ளது. உண்மை ஒரு நாள் வெல்லும் என்பார்கள்.எனவே, உண்மை என்னவென்பது மக்களுக்கு தற்போது புரிக்கின்றது. ஆகவே மக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் எனவும் தெரிவித்தார்.