• Nov 28 2024

நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tamil nila / Feb 13th 2024, 9:25 pm
image

நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நப்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கிடையில் சம தன்மை கொண்ட அதிகாரம் பேணப்பட வேண்டும் என்ற கருத்தும் தனக்கு ஆளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பருத்துத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்பின்னர் ஊடகங்குக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

காலத்துக்கு காலம் அரசியல் காரணங்களுக்காக விவாதிக்கப்படும் விடயங்களுள் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி விடயமும் ஒன்று. 

தமிழரது தரப்பை எடுத்தக்கொண்டால் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட வேளையில் அதை வரவேற்றார்கள். அதன்பின்னர் அது தேவை இல்லை என இன்னொரு தரப்பு கூறியபோபொதும் அதையும் வரவேற்றுள்ள நிலைமைதான் இருக்கின்றது.

ஆனால் இன்று நாடு இருக்கின்ற ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரத்திற்குரிய அவசியம் இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஊடாகத்தான் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நான் நம்பகின்றேன்.

 நிறைவேற்று அதிகாரம் என்பது உலகின் வேறு பல நாடுகளிலும் இருக்கின்ற ஒரு விடயம்தான். இருந்தபோதும் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்ற அவிப்பிராயத்தையே நான் கொண்டுள்ளேன்.

மேலும் நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றறேன்.

அதேநேரம் தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. அதாவது செயலற்றுக் கிடந்த இருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர் செய்து ஓடச் செய்துள்ளார் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்சிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம். 

இதையே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குடாநாட்டில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மிக அவசியமானதாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிராமிய குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

இதனூடாக சமூகவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் மற்றும் கால்நடை களவு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை கட்டப்படுத்த முடியும் என நம்பகின்றேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நப்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கிடையில் சம தன்மை கொண்ட அதிகாரம் பேணப்பட வேண்டும் என்ற கருத்தும் தனக்கு ஆளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.பருத்துத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்பின்னர் ஊடகங்குக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –காலத்துக்கு காலம் அரசியல் காரணங்களுக்காக விவாதிக்கப்படும் விடயங்களுள் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி விடயமும் ஒன்று. தமிழரது தரப்பை எடுத்தக்கொண்டால் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட வேளையில் அதை வரவேற்றார்கள். அதன்பின்னர் அது தேவை இல்லை என இன்னொரு தரப்பு கூறியபோபொதும் அதையும் வரவேற்றுள்ள நிலைமைதான் இருக்கின்றது.ஆனால் இன்று நாடு இருக்கின்ற ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரத்திற்குரிய அவசியம் இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஊடாகத்தான் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நான் நம்பகின்றேன். நிறைவேற்று அதிகாரம் என்பது உலகின் வேறு பல நாடுகளிலும் இருக்கின்ற ஒரு விடயம்தான். இருந்தபோதும் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்ற அவிப்பிராயத்தையே நான் கொண்டுள்ளேன்.மேலும் நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றறேன்.அதேநேரம் தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. அதாவது செயலற்றுக் கிடந்த இருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர் செய்து ஓடச் செய்துள்ளார் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்சிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம். இதையே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.இதேநேரம் குடாநாட்டில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மிக அவசியமானதாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிராமிய குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளேன்.இதனூடாக சமூகவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் மற்றும் கால்நடை களவு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை கட்டப்படுத்த முடியும் என நம்பகின்றேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement