• May 15 2025

கிளிநொச்சியில் சஜித் ஆதரவாளர் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..!

Sharmi / May 14th 2025, 10:57 am
image

கிளிநொச்சி அம்பாள் குளம் கிராமத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் குறித்த வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சார நடவடிக்கைகள் ஈடுபட்ட ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் சஜித் ஆதரவாளர் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல். கிளிநொச்சி அம்பாள் குளம் கிராமத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெற்றார்.இந்த நிலையில் குறித்த வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சார நடவடிக்கைகள் ஈடுபட்ட ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement