• Nov 23 2024

கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்...! அதிர்ச்சியில் கடற்றொழிலாளர்கள்..!

Chithra / Dec 28th 2023, 11:20 am
image


மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று  காலை கரை ஒதுங்கியுள்ளது.

அப்பகுதியில் கடலில் நேற்றையதினம் மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பொருள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றர்.

இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது கடற்றொழில்  நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும்.

எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை களுவாஞ்சிகுடி காவல்துறையினரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள். அதிர்ச்சியில் கடற்றொழிலாளர்கள். மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று  காலை கரை ஒதுங்கியுள்ளது.அப்பகுதியில் கடலில் நேற்றையதினம் மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.இந்நிலையில் அப்பொருள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றர்.இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது கடற்றொழில்  நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும்.எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை களுவாஞ்சிகுடி காவல்துறையினரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement