முல்லைத்தீவில் கடந்த வருட இறுதிப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இளைஞன் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் கடந்த வருடம் கார்த்திகை 05 ஆம் திகதியன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது
குறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன்(24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில், காணாமல் போன இளைஞரால் பயன்படுத்தப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன
இதேவேளை, குறித்த இளைஞனின் வழக்கு முல்லைத்தீவு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது
காணாமல் போன தனது சகோதரனின் தொலைபேசியை இளைஞர் ஒருவர் பாவனையில் வைத்திருப்பதாக காணாமல் போன இளைஞனின் சகோதரனால் நட்டாங்கண்டல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று(01) தொலைபேசி வைத்திருந்த குறித்த இளைஞரை அழைத்து சென்ற பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்ட பின்னர் , வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்கான தடையினை விதித்து குறித்த இளைஞரை விடுவித்துள்ளதாகவும் குறித்த தொலைபேசியை சான்று பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் மாயமான இளைஞன். மீட்கப்பட்ட தொலைபேசி. முல்லைத்தீவில் கடந்த வருட இறுதிப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இளைஞன் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் கடந்த வருடம் கார்த்திகை 05 ஆம் திகதியன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுகுறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன்(24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில், காணாமல் போன இளைஞரால் பயன்படுத்தப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் இடம்பெற்றிருந்தனஇதேவேளை, குறித்த இளைஞனின் வழக்கு முல்லைத்தீவு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றதுகாணாமல் போன தனது சகோதரனின் தொலைபேசியை இளைஞர் ஒருவர் பாவனையில் வைத்திருப்பதாக காணாமல் போன இளைஞனின் சகோதரனால் நட்டாங்கண்டல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் இன்று(01) தொலைபேசி வைத்திருந்த குறித்த இளைஞரை அழைத்து சென்ற பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்ட பின்னர் , வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்கான தடையினை விதித்து குறித்த இளைஞரை விடுவித்துள்ளதாகவும் குறித்த தொலைபேசியை சான்று பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.