• Oct 29 2026

எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் மர்மம்? விசாரணைக்கு உத்தரவு!

Chithra / Oct 29th 2026, 10:25 am
image


நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.


எரிவாயு ஏற்றிவந்த கப்பலொன்று நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதமே தற்போதைய தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த கப்பல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாக நாட்டை வந்தடைந்ததாகவும், அதன் பின்னர் எரிவாயுவை இறக்குதல் மற்றும் விநியோகப் போக்குவரத்து நடவடிக்கைகளில் மேலும் மூன்று நாட்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக நாட்டில் சுமார் 250,000 முதல் 300,000 வரையிலான வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும், தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்வரும் 7 முதல் 8 நாட்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என பிரதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நாளாந்தம் 100,000 எண்ணிக்கையிலான 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீர்ந்துவிடக்கூடும் என்றாலும், வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்று பொதுவாக இரண்டரை முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் மர்மம் விசாரணைக்கு உத்தரவு நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.எரிவாயு ஏற்றிவந்த கப்பலொன்று நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதமே தற்போதைய தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.குறித்த கப்பல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாக நாட்டை வந்தடைந்ததாகவும், அதன் பின்னர் எரிவாயுவை இறக்குதல் மற்றும் விநியோகப் போக்குவரத்து நடவடிக்கைகளில் மேலும் மூன்று நாட்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக நாட்டில் சுமார் 250,000 முதல் 300,000 வரையிலான வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எனினும், தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்வரும் 7 முதல் 8 நாட்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என பிரதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நாளாந்தம் 100,000 எண்ணிக்கையிலான 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீர்ந்துவிடக்கூடும் என்றாலும், வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்று பொதுவாக இரண்டரை முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement