• Dec 13 2024

யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல் - இதுவரை 6 பேர் பலி, 32 பேர் வைத்தியசாலைகளில்!

Tamil nila / Dec 12th 2024, 10:24 pm
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒரு வகையான காய்ச்சல் காரணமாக இதுவரை 32 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

 குறித்த ஒரு வகையான நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர்.

 இந்தநிலையில் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிலவற்றின் மூலம் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தப்ரேரா தெரிவித்துள்ளார். 

 இதனையடுத்து, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் என கருதி, அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

 அத்துடன் விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல் - இதுவரை 6 பேர் பலி, 32 பேர் வைத்தியசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒரு வகையான காய்ச்சல் காரணமாக இதுவரை 32 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  குறித்த ஒரு வகையான நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்தநிலையில் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிலவற்றின் மூலம் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தப்ரேரா தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் என கருதி, அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.  அத்துடன் விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement