• Nov 23 2024

ஆரம்பமானது நாகபட்டினம்- காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை...!

Sharmi / Aug 16th 2024, 2:06 pm
image

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று(16) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம்(16)  குறித்த கப்பல் சேவையினை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்,  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்,  புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாய ஆகியோர் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிலையில் 47 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.






ஆரம்பமானது நாகபட்டினம்- காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை. நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று(16) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்றையதினம்(16)  குறித்த கப்பல் சேவையினை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்,  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்,  புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாய ஆகியோர் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.இந்நிலையில் 47 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement