ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அக்கட்சியின் ஜனாதிபதிவேட்பாளர் நாளை (07) அறிவிக்கப்படுவார்.
முன்னதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்தப்படவிருந்த தம்மிக்க பெரேரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, நாமலை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தம்மை முன்னிறுத்தப் போவதில்லை என தம்மிக்க பெரேரா அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (07) அறிவிக்கப்படுவார்.முன்னதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்தப்படவிருந்த தம்மிக்க பெரேரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, நாமலை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தம்மை முன்னிறுத்தப் போவதில்லை என தம்மிக்க பெரேரா அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.