• Nov 13 2024

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகள் : மேய்ச்சல்தரை பிரச்சினை குறித்து பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

Tharmini / Nov 7th 2024, 9:42 am
image

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரவைக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்டகால பிரச்சினையாக மேய்ச்சல் தரை காணப்படுகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்த போதும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அடாத்தாக விவசாயம் செய்து வருகின்றமை குறித்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமது பிரச்சினையை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நேற்று (06)

  இந்த நிலையில் எதிர்வரும் (09) ஆம் திகதி குறித்த பிரச்சினை குறித்து இருதரப்பினரையும் அழைத்து தீர்வை பெற்றுத்தருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கட்டுக்கரை புல்லறுத்தான் குளம் பகுதியில் 352 ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரவையாக வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில்

தற்போது வரை இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.




நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகள் : மேய்ச்சல்தரை பிரச்சினை குறித்து பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரவைக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்டகால பிரச்சினையாக மேய்ச்சல் தரை காணப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்த போதும் இதுவரை வழங்கப்படவில்லை.இந்த நிலையில் குறித்த பகுதியில் அடாத்தாக விவசாயம் செய்து வருகின்றமை குறித்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமது பிரச்சினையை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நேற்று (06)  இந்த நிலையில் எதிர்வரும் (09) ஆம் திகதி குறித்த பிரச்சினை குறித்து இருதரப்பினரையும் அழைத்து தீர்வை பெற்றுத்தருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.கட்டுக்கரை புல்லறுத்தான் குளம் பகுதியில் 352 ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரவையாக வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில்தற்போது வரை இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement