தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவி, சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்த தமது பிராடோ ரக மகிழுந்தினை வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்துள்ளதாகவும் அது தொடர்பாக பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு, முன்னதாக முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனவும் முறைப்பாட்டாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவியான சட்டத்தரணி தக்ஷிகா திசரங்கனி, நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாட்டை அளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு எதிராக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவி, சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்த தமது பிராடோ ரக மகிழுந்தினை வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்துள்ளதாகவும் அது தொடர்பாக பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு, முன்னதாக முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். எனினும், அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனவும் முறைப்பாட்டாளர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவியான சட்டத்தரணி தக்ஷிகா திசரங்கனி, நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாட்டை அளித்துள்ளார்.