• Mar 24 2025

முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்! அநுர அரசு அதிரடி திட்டம்

Chithra / Mar 23rd 2025, 9:52 am
image


கடந்த அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். 

குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி மேலும் கூறியுள்ளார். 

பல்வேறு காலங்களில் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நமது நாட்டின் அரச சொத்து, அரச வளங்கள் மற்றும் அரச நிதியை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்து கையகப்படுத்தியுள்ளனர். 

மேலும் அவர்கள் அவற்றைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். 

நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம், மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையையும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என்றார்.

முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம் அநுர அரசு அதிரடி திட்டம் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி மேலும் கூறியுள்ளார். பல்வேறு காலங்களில் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நமது நாட்டின் அரச சொத்து, அரச வளங்கள் மற்றும் அரச நிதியை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்து கையகப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் அவற்றைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம், மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையையும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement