சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம்(26) மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவு கூறப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்,சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிப்பு. சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம்(26) மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவு கூறப்பட்டது.மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும்,சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.