• Dec 27 2024

Tharmini / Dec 26th 2024, 12:04 pm
image

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26), 20 வருட பூர்த்தியை முன்னிட்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான நினைவேந்தல் மூதூர் -தக்வாநகரில் இன்று (26) காலை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலகம் , திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முதல் நிகழ்வாக சுனாமி அனர்த்தில் மூதூர் பிரதேசத்தில் உயிரிழந்த 286 நபர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுப் பெயர்பலகை திருகோணமலை மாவட்ட அரசாங்க சாமிந்த ஹெட்டியாராச்சினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி 9.27 மணிக்கு 2 நிமிட மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகனதாஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ், மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் றொசானா றசீம் , சர்வமதத் தலைவர்கள், அரசத் திணைக்களங்களின் உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.





மூதூர்- தக்வாநகரில் சுனாமி நினைவேந்தல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26), 20 வருட பூர்த்தியை முன்னிட்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான நினைவேந்தல் மூதூர் -தக்வாநகரில் இன்று (26) காலை இடம்பெற்றது.மூதூர் பிரதேச செயலகம் , திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது முதல் நிகழ்வாக சுனாமி அனர்த்தில் மூதூர் பிரதேசத்தில் உயிரிழந்த 286 நபர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுப் பெயர்பலகை திருகோணமலை மாவட்ட அரசாங்க சாமிந்த ஹெட்டியாராச்சினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி 9.27 மணிக்கு 2 நிமிட மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார்.ஏனைய அதிதிகளாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகனதாஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ், மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் றொசானா றசீம் , சர்வமதத் தலைவர்கள், அரசத் திணைக்களங்களின் உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement