• Nov 21 2024

நாடளாவிய ரீதியில் தகால் சேவை செயலிழப்பு – நள்ளிரவு வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு..!

Chithra / Dec 12th 2023, 2:20 pm
image


நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றையதினமும் தொடரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதான எமது செய்திளார் தெரிவித்துள்ளார். 

நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இரண்டாவது நாளாக தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்வதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்ததால்  தபால் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்

அத்துடன், 2024 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.


இதேவேளை திருகோணமலை - தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஆரம்பித்த அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று செவ்வாய்கிழமை  இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதனால் தோப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு சேவை வழங்காது மூடப்பட்டுக் காணப்பட்டது.


நாடளாவிய ரீதியில் தகால் சேவை செயலிழப்பு – நள்ளிரவு வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு. நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றையதினமும் தொடரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதான எமது செய்திளார் தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இரண்டாவது நாளாக தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்வதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்ததால்  தபால் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்அத்துடன், 2024 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.இதேவேளை திருகோணமலை - தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஆரம்பித்த அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று செவ்வாய்கிழமை  இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் தோப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு சேவை வழங்காது மூடப்பட்டுக் காணப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement