• Sep 29 2024

இலங்கையில் 2010இற்குப் பின் அதிக எண்ணிக்கையான மரணங்கள் 2022ஆம் ஆண்டில் பதிவு..! அதிர்ச்சி அறிக்கை

Chithra / Dec 12th 2023, 1:43 pm
image

Advertisement

 

 

நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தில் 130,337 பதிவாகியிருந்த உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் 179,792 ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 633,303 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மாத்திரம் 852,652 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தி பி.எம்.பி. அனுரகுமார மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் 2010இற்குப் பின் அதிக எண்ணிக்கையான மரணங்கள் 2022ஆம் ஆண்டில் பதிவு. அதிர்ச்சி அறிக்கை   நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தில் 130,337 பதிவாகியிருந்த உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் 179,792 ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்துள்ளார்.அத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 633,303 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மாத்திரம் 852,652 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தி பி.எம்.பி. அனுரகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement