இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 18,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான,
பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புடன், 18,790 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான,
பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில்,
பல நாள் மீன்பிடிக் கப்பலில் 46 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.
அந்த கப்பலில் இருந்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று (18) காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் திடீர் சோதனை : 18,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 18,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான, பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புடன், 18,790 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான, பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில், பல நாள் மீன்பிடிக் கப்பலில் 46 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் கண்டுபிடித்தனர். அந்த கப்பலில் இருந்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று (18) காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.