நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றததில் இன்று (07) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு. நமது நாட்டில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அதிக அளவில் உள்ளன. நேற்றும் கூட, அளுத்கம பகுதியில் ஒரு முச்சக்கர வண்டி ஒரு வாகனத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானது
நாட்டில் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளன. அவை அனைத்து அடுத்த மாதத்திற்குள் பாதுகாப்பான ரயில் கடவையாக மாற்றி வீதிப்பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.
மேலும், சிறந்த போக்குவரத்தை உருவாக்க நேரம் எடுத்தாலும், மக்களின் உயிரைப் பாதுகாக்க அவ்வளவு நேரம் எடுக்கக்கூடாது என பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் பாதுகாப்பற்ற 400 ரயில் கடவைகள் - அரசு எடுத்த நடவடிக்கை நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றததில் இன்று (07) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு. நமது நாட்டில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அதிக அளவில் உள்ளன. நேற்றும் கூட, அளுத்கம பகுதியில் ஒரு முச்சக்கர வண்டி ஒரு வாகனத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதுநாட்டில் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளன. அவை அனைத்து அடுத்த மாதத்திற்குள் பாதுகாப்பான ரயில் கடவையாக மாற்றி வீதிப்பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.மேலும், சிறந்த போக்குவரத்தை உருவாக்க நேரம் எடுத்தாலும், மக்களின் உயிரைப் பாதுகாக்க அவ்வளவு நேரம் எடுக்கக்கூடாது என பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.