• Nov 26 2024

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் ஒலி வெற்றி பெற்றார்

Tharun / Jul 22nd 2024, 5:08 pm
image

நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை, பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

நான்கு கட்சி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஒலி, 275 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

"188 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாக்களித்ததால், அது பெரும்பான்மையை விட அதிகமாகும்" என்று சபாநாயகர் தேவ் ராஜ் கிமிரே அறிவித்தார்.

நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவைக் கோரும் போது, ஜூலை 1 ஆம் திக‌தி இரவு புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் , நேபாளி காங்கிரஸுக்கும் இடையே எட்டப்பட்ட ஏழு அம்ச உடன்பாட்டை ஒலி பகிரங்கப்படுத்தினார்.

ஒப்பந்தத்தின் கீழ், ஒலி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை வழிநடத்துவார், அதே நேரத்தில் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டியூபா 2027 பொதுத் தேர்தல் வரை அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார்.

நான்காவது முறையாக பிரதமராக ஜூலை 15 ஆம் திக‌தி பதவியேற்ற ஓலி, அரசியலமைப்பின் கீழ் 30 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். ■


நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் ஒலி வெற்றி பெற்றார் நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை, பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.நான்கு கட்சி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஒலி, 275 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்."188 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாக்களித்ததால், அது பெரும்பான்மையை விட அதிகமாகும்" என்று சபாநாயகர் தேவ் ராஜ் கிமிரே அறிவித்தார்.நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவைக் கோரும் போது, ஜூலை 1 ஆம் திக‌தி இரவு புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் , நேபாளி காங்கிரஸுக்கும் இடையே எட்டப்பட்ட ஏழு அம்ச உடன்பாட்டை ஒலி பகிரங்கப்படுத்தினார்.ஒப்பந்தத்தின் கீழ், ஒலி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை வழிநடத்துவார், அதே நேரத்தில் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டியூபா 2027 பொதுத் தேர்தல் வரை அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார்.நான்காவது முறையாக பிரதமராக ஜூலை 15 ஆம் திக‌தி பதவியேற்ற ஓலி, அரசியலமைப்பின் கீழ் 30 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். ■

Advertisement

Advertisement

Advertisement