இலங்கை போக்குவரத்துச் சபையானது “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த பஸ்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், பஸ் நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
முதற்கட்டமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நான்கு சுற்றுலா வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னோடித் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய மத வழிபாட்டுத் தலங்களை இந்த சுற்றுலா வளையங்களில் இணைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வரலாற்று விடயங்களைக் காணும் வாய்ப்பை வழங்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பில் புதிய பஸ் சேவை ஆரம்பம். இலங்கை போக்குவரத்துச் சபையானது “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.இந்த பஸ்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், பஸ் நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.முதற்கட்டமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நான்கு சுற்றுலா வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னோடித் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும்.கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய மத வழிபாட்டுத் தலங்களை இந்த சுற்றுலா வளையங்களில் இணைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வரலாற்று விடயங்களைக் காணும் வாய்ப்பை வழங்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.