• Oct 02 2024

உலகளவில் கவனம் ஈர்க்கும் புதிய 'நண்டு கார்'..!

Tamil nila / Jan 14th 2024, 2:12 pm
image

Advertisement

உலக மின்சாதன நுகர்வோர் கண்காட்சியில் தனது புதிய காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய 'நண்டு காரின் அறிமுகம் தொடர்பில் தெரியவருவதாவது,,

ஹூண்டாயின் மோபிஸ் நெக்ஸ்ட் ஜெனரேசன் இ - கார்னர் தொழில்நுட்பம் (Hyundai Mobis’ next-generation e-Corner system) மூலம் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த கார் நண்டைப் போல இயங்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் 'நண்டு கார்' எனப் பிரபலமாகி வருகிறது.

எவ்வாறெனில்  சாதாரண கார்களைப் போல் முன்னால் மற்றும் பின்னால் மட்டும் செல்லாமல், இடது மற்றும் வலது பக்கமும் நகர்கிறது. சாதாரண கார்களில் முன்னால் இருக்கும் இரண்டு சக்கரங்களை மட்டுமே கட்டுப்படுத்தி வளைக்க முடியும். ஆனால் இந்த காரில் நான்கு சக்கரங்களையும் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு சக்கரத்தையும் 90 டிகிரி வரை வளைக்கலாம்.

முந்தைய கார்களைப்போல் நீளமாக திரும்பத் தேவையில், ஒரு பந்தினை சுற்றிவிடுவது போல், நின்ற இடத்திலேயே 360 டிகிரி கோணத்தில் சுற்றுகிறது இந்த கார். இந்த தொழில்நுட்பத்திற்கு 'இன்-வீல்' (In-wheel) எனப் பெயரிட்டுள்ளது.

இது போன்ற  வியத்தகு  தொழில்நுட்பத்தை சிக்கலான கட்டுப்பாடுகளோடு கடந்த ஆண்டு தென்கொரியாவில் அறிமுகப்படுத்திய ஹுண்டாய் இப்போது மிகுந்த முன்னேற்றங்களுடன் இந்த காரை களமிறக்கியுள்ளது.

உலகளவில் கவனம் ஈர்க்கும் புதிய 'நண்டு கார்'. உலக மின்சாதன நுகர்வோர் கண்காட்சியில் தனது புதிய காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய 'நண்டு காரின் அறிமுகம் தொடர்பில் தெரியவருவதாவது,,ஹூண்டாயின் மோபிஸ் நெக்ஸ்ட் ஜெனரேசன் இ - கார்னர் தொழில்நுட்பம் (Hyundai Mobis’ next-generation e-Corner system) மூலம் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் நண்டைப் போல இயங்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் 'நண்டு கார்' எனப் பிரபலமாகி வருகிறது.எவ்வாறெனில்  சாதாரண கார்களைப் போல் முன்னால் மற்றும் பின்னால் மட்டும் செல்லாமல், இடது மற்றும் வலது பக்கமும் நகர்கிறது. சாதாரண கார்களில் முன்னால் இருக்கும் இரண்டு சக்கரங்களை மட்டுமே கட்டுப்படுத்தி வளைக்க முடியும். ஆனால் இந்த காரில் நான்கு சக்கரங்களையும் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு சக்கரத்தையும் 90 டிகிரி வரை வளைக்கலாம்.முந்தைய கார்களைப்போல் நீளமாக திரும்பத் தேவையில், ஒரு பந்தினை சுற்றிவிடுவது போல், நின்ற இடத்திலேயே 360 டிகிரி கோணத்தில் சுற்றுகிறது இந்த கார். இந்த தொழில்நுட்பத்திற்கு 'இன்-வீல்' (In-wheel) எனப் பெயரிட்டுள்ளது.இது போன்ற  வியத்தகு  தொழில்நுட்பத்தை சிக்கலான கட்டுப்பாடுகளோடு கடந்த ஆண்டு தென்கொரியாவில் அறிமுகப்படுத்திய ஹுண்டாய் இப்போது மிகுந்த முன்னேற்றங்களுடன் இந்த காரை களமிறக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement