• Nov 25 2024

இலங்கைக்கு புதிய ஆபத்து..! கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாடு! முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை

Chithra / Jan 18th 2024, 10:18 am
image

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்படைய நோய் நிலைமைகள் உள்ள மக்கள் முகக்கவசங்கள் அணிவது பாதுகாப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டின் காற்று மாசடைவதற்கு வங்காள விரிகுடா போன்ற பிற நாடுகளின் வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மாசடைந்த காற்றே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது.

கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள காற்றில் உள்ள தூசித் துகள்களின் அளவு நேற்று காலை 163 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு - 7 இல் இந்த எண்ணிக்கை 141 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, அதே எண்ணிக்கை கொழும்பிலும் 78 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், பதுளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களைச் சுற்றி வளிமண்டலத்தில் தூசி துகள்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.

கொழும்பு,  காலி,  யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய மாவட்டங்களிலும் மன்னார் பகுதியிலும் காற்றின் தரக் குறியீடு குறைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இலங்கைக்கு புதிய ஆபத்து. கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாடு முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்படைய நோய் நிலைமைகள் உள்ள மக்கள் முகக்கவசங்கள் அணிவது பாதுகாப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டின் காற்று மாசடைவதற்கு வங்காள விரிகுடா போன்ற பிற நாடுகளின் வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மாசடைந்த காற்றே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது.கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள காற்றில் உள்ள தூசித் துகள்களின் அளவு நேற்று காலை 163 ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு - 7 இல் இந்த எண்ணிக்கை 141 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, அதே எண்ணிக்கை கொழும்பிலும் 78 ஆக பதிவாகியுள்ளது.மேலும், பதுளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களைச் சுற்றி வளிமண்டலத்தில் தூசி துகள்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.கொழும்பு,  காலி,  யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய மாவட்டங்களிலும் மன்னார் பகுதியிலும் காற்றின் தரக் குறியீடு குறைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement