• Mar 14 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

Thansita / Mar 13th 2025, 9:08 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ் நியமனம் பெற்றுள்ளார்

இன்று(13) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  லலித் லீலிரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இப்பதவி ஏற்பு நிகழ்வில் மாவட்டத்தின் 15 பொலிஸ் அத்தியட்சகர் நிலையங்களினதும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், மாவட்ட பொலிஸ் அதியட்சகர்,  உதவி பொலிஸ் அத்தியட்சகர் , உட்பட மாவட்டத்தின் பிரதான பொலிஸ். அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்

மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமை புரிந்த ஜகத் நிசாந்த இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சர்வ மத ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது சர்வ மத தலைவர்களின் ஆசிய உரைகளும் இடம் பெற்றது


மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ் நியமனம் பெற்றுள்ளார்இன்று(13) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றதுமட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  லலித் லீலிரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இப்பதவி ஏற்பு நிகழ்வில் மாவட்டத்தின் 15 பொலிஸ் அத்தியட்சகர் நிலையங்களினதும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், மாவட்ட பொலிஸ் அதியட்சகர்,  உதவி பொலிஸ் அத்தியட்சகர் , உட்பட மாவட்டத்தின் பிரதான பொலிஸ். அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமை புரிந்த ஜகத் நிசாந்த இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதுபௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சர்வ மத ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து புதிய பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது சர்வ மத தலைவர்களின் ஆசிய உரைகளும் இடம் பெற்றது

Advertisement

Advertisement

Advertisement