• Sep 21 2024

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு புதிய வேலை! விரைவில் புறப்படவுள்ள 100 பேர்!

Chithra / Aug 8th 2024, 11:32 am
image

Advertisement

 

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை, மொத்தம் 3,694 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதுடன், மேலும் 100 நபர்கள் விரைவில் புறப்பட உள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்புகளின் ஒரு பகுதியாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2004 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து, இலங்கையர்கள் தென் கொரியாவில் பணியாற்றுவதற்காக வெளியேறி வருகின்றனர்.

தற்போது தென் கொரியாவில் பதவிகளுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றதுடன், மேலும் பல தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு எதிர்காலத்தில் வெளியேற திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு புதிய வேலை விரைவில் புறப்படவுள்ள 100 பேர்  இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை, மொத்தம் 3,694 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதுடன், மேலும் 100 நபர்கள் விரைவில் புறப்பட உள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்புகளின் ஒரு பகுதியாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.இதேவேளை 2004 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து, இலங்கையர்கள் தென் கொரியாவில் பணியாற்றுவதற்காக வெளியேறி வருகின்றனர்.தற்போது தென் கொரியாவில் பதவிகளுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றதுடன், மேலும் பல தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு எதிர்காலத்தில் வெளியேற திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement