• Nov 19 2024

சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை பெறுவதை தடை செய்யும் புதிய சட்டம் - அவுஸ்திரேலிய

Tharmini / Nov 7th 2024, 11:13 am
image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை பெறுவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இயற்றப்படும்,

என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) இன்று (07) தெரிவித்துள்ளார்.

இதற்கு இணங்காத சமூக ஊடக தளங்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டமூலமானது எதிர்வரும் நவம்பர் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வருட காலம் அவகாசம் வழங்கப்படும்.

தொழில்நுட்ப தளங்கள் தடையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் கண்டறிவதற்காகவே இவ்வாறு ஒரு வருட அவகாசம் வழங்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலியாவின் கொள்கை மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தாலும், பல நாடுகள் ஏற்கனவே சட்டத்தின் மூலம் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடைவிதிக்க முன்மொழிந்தது, இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை பெறுவதை தடை செய்யும் புதிய சட்டம் - அவுஸ்திரேலிய அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை பெறுவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இயற்றப்படும், என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) இன்று (07) தெரிவித்துள்ளார்.இதற்கு இணங்காத சமூக ஊடக தளங்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.புதிய சட்டமூலமானது எதிர்வரும் நவம்பர் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வருட காலம் அவகாசம் வழங்கப்படும்.தொழில்நுட்ப தளங்கள் தடையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் கண்டறிவதற்காகவே இவ்வாறு ஒரு வருட அவகாசம் வழங்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார்.அவுஸ்திரேலியாவின் கொள்கை மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தாலும், பல நாடுகள் ஏற்கனவே சட்டத்தின் மூலம் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன.குறிப்பாக கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடைவிதிக்க முன்மொழிந்தது, இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement