2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் கீழ் கடற்றொழில் சமூகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
கொழும்பில் உள்ள தாமரை தடாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் தொடக்க விழா நடைபெறவுள்ளது.
கடற்றொழிலாளர் குடும்பங்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் “போஹோசத் ரடக் - லஸ்ஸன ஜீவிதயக்” கொள்கையின் கீழ் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறும் பயனாளி மரணமடைந்தால், வாழ்க்கைத் துணைவருக்குக் காப்பீட்டுப் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கடற்றொழில் சமூகத்திற்கான புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று முதல் அமுல் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் கீழ் கடற்றொழில் சமூகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. கொழும்பில் உள்ள தாமரை தடாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. கடற்றொழிலாளர்கள் 60 வயதை எட்டியதும் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். கடற்றொழிலாளர் குடும்பங்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் “போஹோசத் ரடக் - லஸ்ஸன ஜீவிதயக்” கொள்கையின் கீழ் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் பெறும் பயனாளி மரணமடைந்தால், வாழ்க்கைத் துணைவருக்குக் காப்பீட்டுப் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.