• Jan 16 2025

சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துவருவதில் புதிய நடைமுறை

Chithra / Jan 5th 2025, 12:19 pm
image



சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை இரும்பு சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பதிலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய நடைமுறையை பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கபட்டுள்ளவர்களும் மனிதர்கள் எனவும் அவர்களை விலங்குகளை போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அண்மையில் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் சிறைக்கைதிகளை மன்றில் முன்னிலைப்படுத்தும் போது பின்பற்றப்படவுள்ள வழிமுறை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிமன்றுக்குள் சந்தேகநபர்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து முன்னிலைப்படுத்தியமை தவறாகும். அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். 

அதேபோன்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். குறிப்பாக சந்தேகநபர்களை ஒன்றாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது இரும்பு சங்கிலியால் பிணைத்து அழைத்துச் செல்ல வேண்டி ஏற்படும்.

காரணம் அவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 

எனினும் இந்த முறைமையைய மாற்றி புதிய நடைமுறையை பின்பற்றுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அதற்கான மாற்று வழி தொடர்பில் நாம் நிச்சயம் ஆராய்வோம் என்றார்.

சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துவருவதில் புதிய நடைமுறை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை இரும்பு சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பதிலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய நடைமுறையை பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கபட்டுள்ளவர்களும் மனிதர்கள் எனவும் அவர்களை விலங்குகளை போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அண்மையில் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் எதிர்காலத்தில் சிறைக்கைதிகளை மன்றில் முன்னிலைப்படுத்தும் போது பின்பற்றப்படவுள்ள வழிமுறை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நீதிமன்றுக்குள் சந்தேகநபர்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து முன்னிலைப்படுத்தியமை தவறாகும். அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோன்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். குறிப்பாக சந்தேகநபர்களை ஒன்றாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது இரும்பு சங்கிலியால் பிணைத்து அழைத்துச் செல்ல வேண்டி ஏற்படும்.காரணம் அவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனினும் இந்த முறைமையைய மாற்றி புதிய நடைமுறையை பின்பற்றுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அதற்கான மாற்று வழி தொடர்பில் நாம் நிச்சயம் ஆராய்வோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement