• May 20 2024

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் -அரசு விளக்கம்! SamugamMedia

Tamil nila / Mar 16th 2023, 2:35 pm
image

Advertisement

ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி கைப்பேசிகள் மற்றும் ஒஎஸ் அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்ய சோதனை செய்ய ஆய்வகங்களை கட்டமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில் அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், 2026 ஆண்டு வாக்கில் மின்னணு உற்பத்தியில் 300 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ர அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

பாதுகாப்பான ஒஎஸ் அப்டேட் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் குறித்த தரக்கட்டுப்பாட்டு பணிகளை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) கவனித்துக் கொள்ளும் என இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தியாளர்கள், இதர சந்தையை சேர்ந்த பங்குதாரர்களுடன் கூடுதலாக சந்திப்புகளை நடத்திய பின் புதிய விதிகள் விதிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இவற்றை ஒரு ஆண்டிற்குள் பின்பிற்ற வேண்டும்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் -அரசு விளக்கம் SamugamMedia ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி கைப்பேசிகள் மற்றும் ஒஎஸ் அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்ய சோதனை செய்ய ஆய்வகங்களை கட்டமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில் அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், 2026 ஆண்டு வாக்கில் மின்னணு உற்பத்தியில் 300 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ர அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.பாதுகாப்பான ஒஎஸ் அப்டேட் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் குறித்த தரக்கட்டுப்பாட்டு பணிகளை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) கவனித்துக் கொள்ளும் என இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தியாளர்கள், இதர சந்தையை சேர்ந்த பங்குதாரர்களுடன் கூடுதலாக சந்திப்புகளை நடத்திய பின் புதிய விதிகள் விதிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இவற்றை ஒரு ஆண்டிற்குள் பின்பிற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement